24.2 C
Jaffna
January 4, 2025
Pagetamil
சினிமா

ஒக்டோபரில் தொடங்கும் அஜித், விஜய் படப்பிடிப்புகள்!

‘விஜய் 68’ மற்றும் அஜித்தின் ‘விடாமுயற்சி’ இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ஒக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் விஜய் ‘வாரிசு’, அஜித் ‘துணிவு’ என இருவரும் ஒரே ரேஸில் இருந்து தத்தம் படங்களை வெளியிட்டன. அடுத்தடுத்த படங்களுக்கு நகரும் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தை முடித்து அடுத்த படத்துக்கே தயாராகிவிட்டார். ‘லியோ’ ஒக்டோபர் 19ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆனால் அஜித்தை பொறுத்தவரை ‘துணிவு’ படத்துக்குப் பிறகு அவரது அடுத்த படத்துக்கான நகர்வு நிதானமாகவே இருக்கிறது. தனது பைக் டூர் பயணத்தை முடித்து வந்த அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்துக்கு தயாராகியுள்ளார். இந்நிலையில், இருவரின் படங்களும் ஒக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அக்டோபர் முதல் வாரம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு துபாயில் ஒக்டோபர் 4ஆம் திகதி தொடங்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு படங்களின் படப்பிடிப்புகளுமே ஒரே நேரத்தில் தொடங்க உள்ளதால், பட ரிலீஸும் ஒரே நேரத்தில் இருக்குமா என்பதை பொறுத்திருந்தது தான் பார்க்க வேண்டும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

12 ஆண்டு பிரச்சினை தீர்ந்து வெளியாகிறது மதகஜராஜா

Pagetamil

பொங்கல் ரேஸில் இருந்து விலகியது ‘விடாமுயற்சி’

Pagetamil

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

Pagetamil

சல்மான் கான் மீது காதல்: நினைவு கூர்கிறார் சுஷ்மிதா சென்

Pagetamil

‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25இல் ரிலீஸ்

Pagetamil

Leave a Comment