நைஜரிலிருந்து தூதரையும், இராணுவத்தையும் திரும்பப் பெறுகிறது பிரான்ஸ்!

Date:

நைஜரில் இருந்து தனது தூதரையும் துருப்புக்களையும் திரும்பப் பெறுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

“பிரான்ஸ் தனது தூதரை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் எங்கள் தூதரும் பல இராஜதந்திரிகளும் பிரான்சுக்குத் திரும்புவார்கள்,” என்று மக்ரோன் ஞாயிற்றுக்கிழமை ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறினார்.

இராணுவ ஒத்துழைப்பு “முடிந்து விட்டது” என்றும் பிரெஞ்சு துருப்புக்கள் “வரும் மாதங்கள் மற்றும் வாரங்களில்” வெளியேற ஆரம்பித்து,”வருட இறுதிக்குள்” முழுமையாக வெளியேறும் என்றும் அவர் கூறினார்.

நைஜரில் உள்ள தளத்தில் சுமார் 1,500 பிரான்ஸ் துருப்புக்கள் நிலை கொண்டுள்ளன.

நைஜர் ஜனாதிபதி மொஹமட் பாஸூமின் ஆட்சியை கவிழ்த்து, அதிகாரத்தை கைப்பற்றிய இராணுவம், நைஜரிலிருந்து பிரான்ஸ் இராணுவத்தையும், தூதரையும் வெளியேறுமாறு கோரியிருந்தது. எனினும், அப்போது பிரான்ஸ் இந்த கோரிக்கையை நிராகரித்தது.

பிரான்ஸ் இராணுவத்தை வெளியேறுமாறு கோரி, தலைநகர் நியாமியில் சமீபத்திய வாரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  பிரெஞ்சு வீரர்கள் வசிக்கும் இராணுவ தளத்திற்கு வெளியேயும் போராட்டங்கள் நடக்கின்றன.  மக்ரோன் சதிப்புரட்சியை அங்கீகரிக்க மறுத்ததையடுத்து, புதிய ஆட்சியாளர்கள் பிரெஞ்சு தூதர் மற்றும் துருப்புக்களை வெளியேற்றக் கோரி வந்தனர்.

நைஜரின் அண்டை நாடுகளான மாலி மற்றும் புர்கினா பாசோவிலும் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த நாடுகள் பிரான்சின் முன்னாள் காலனி நாடுகள். இந்த இரண்டும், ஏற்கெனவே பிரான்ஸ் துருப்புக்களை தமது நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுள்ளன.

நைஜரிலுள்ள பிரான்ஸ் தூதர் தற்போது தூதரகத்திற்குள் பணயக்கைதியாகவே வைக்கப்பட்டுள்ளார். நைஜர் பாதுகாப்புப் படையினர் யாரையும் உள்ளே நுழையவோ, வெளியேறவோ அனுமதிப்பதில்லை. தூதரகத்தில் உள்ள உணவுப் பொருட்களில் அவர் உயிர் பிழைத்து வருகிறார்.

மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (ECOWAS) நைஜரின் ஜூலை ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து பொருளாதாரத் தடைகளை விதித்தது. கடைசி முயற்சியாக பாஸூமை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் தோல்வியுற்றால் அது இராணுவ ரீதியாக தலையிடக்கூடும் என்று எச்சரித்தது. ஆனால் பிராந்திய நாடுகள் புதிய இராணுவ ஆட்சியாளர்களுக்கு தங்கள் ஆதரவை அறிவித்ததால், ECOWAS பின்வாங்கி விட்டது.

மூன்று சஹேல் நாடுகள் – நைஜர், மாலி மற்றும் புர்கினா பாசோ, இவை அனைத்தும் சமீபத்திய ஆண்டுகளில் ஆட்சிக் கவிழ்ப்புகளைக் கண்டுள்ளன – ஆயுதமேந்திய கிளர்ச்சி அல்லது வெளிப்புற ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக செப்டம்பர் 16 அன்று பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை உருவாக்கின.

பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை  “பிரான்ஸ் தனது தூதரை திரும்ப அழைத்து வர முடிவு செய்துள்ளது, வரும் மணிநேரங்களில் எங்கள் தூதரும் பல இராஜதந்திரிகளும் பிரான்சுக்குத் திரும்புவார்கள்” என்று மக்ரோன் கூறினார்.

பாஸூம் “பணயக்கைதியாக” வைக்கப்பட்டுள்ளார் என்ற பிரான்சின் நிலைப்பாட்டை மக்ரோன் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

“அவர் துணிச்சலான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வந்ததாலும், பெருமளவில் இனக் குடியேற்றம் மற்றும் அரசியல் கோழைத்தனம் இருந்ததாலும் அவர் இந்த ஆட்சிக் கவிழ்ப்பால் குறிவைக்கப்பட்டார்,” என்று அவர் கூறினார்.

நைஜரில் அந்த நேரத்தில் gதவிியிலிருந்த அரசாங்கத்தின் கோரிக்கையையடுத்தே, அங்கு பிரான்ஸ் இராணுவம் சென்றதாக மக்ரோன் குறிப்பிட்டார்.

நைஜரின் இராணுவ ஆட்சியாளர்கள் சதித்திட்டத்தைத் தொடர்ந்து பிரான்சுடனான இராணுவ ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

குட்டிமணி, தங்கதுரை சிலை விவகாரம் – சதீஸிடம் 3 மணி நேரம் விசாரணை!

வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸிடம் பயங்கரவாத தடுப்பு...

நவம்பர் 09 இல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒரு நாள் சுகயீன விடுமுறை போராட்டம்-

கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கமானது (EPDOTU), ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்...

காட்டு யானை தாக்கியதில் இராணுவ சார்ஜென்ட் உயிரிழப்பு

அம்பாறை புறநகர்  பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்