24.9 C
Jaffna
January 23, 2025
Pagetamil
விளையாட்டு

3வது திருமணம் செய்த 70 வயதான WWE பிரபலம்

சர்ச்சைக்குரிய WWE லெஜண்ட் ஹல்க் ஹோகன் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

இரண்டு முறை WWE ஹால் ஆஃப் ஃபேமர் கௌரவமளிக்கப்பட்ட ஹோகன்னுக்கு இப்பொழுது 70 வயது. யோகா பயிற்றுவிப்பாளரான 45 வயதான ஸ்கை டெய்லி என்பவருடன் காதல் வசப்பட்டு, திருமணம் செய்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு புளோரிடாவில் ஒரு சிறிய திருமண விழாவில் இருவரும் இணைந்தனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் ஒரு நண்பரின் திருமணத்தின் போது அவர்கள் சந்தித்துள்ளனர். வெறும் இரண்டு மாதங்களுக்குள் இந்த ஜோடி நிச்சயதார்த்தம் செய்து கொண்டது.

ஹல்க்கின் மகளான பாடகி  ப்ரூக் ஹோகன் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.

ஹல்க்கிற்கு 2 பிள்ளைகள். மூத்தவரான 35 வயதான ப்ரூக்,  திருமணத்தில் கலந்து  கொள்ளாததற்கு காரணம் தெரியவில்லை. அவரது சகோதரன் நிக் (32) தனது மனைவியுடன் திருமணத்தில் கலந்து கொண்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில்  வெளியிட்டார்.

ஹோகனின் உண்மையான பெயர் டெர்ரி ஜீன் போல்லியா. மல்யுத்த போட்டிகளில் ஹோகன் என்ற பெயரில் விளையாடினார்.

அவர் ஏற்கெனவே ஜெனிஃபர் மெக்டேனியல் மற்றும் லிண்டா ஹோகன் (ஹல்க்கின் குழந்தைகளின் தாய்) ஆகியோரை மணந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

Leave a Comment