பிலிப்பைன்ஸில், விமான நிலைய ஒருவர், பயணியிடம் திருடிய பணத்தை விழுங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தலைநகர் மணிலாவிலுள்ள நினோய் அக்கினோ சர்வதேச விமான நிலையத்தில் செப்டெம்பர் 8ஆம் திகதி இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
இதில், சீனப் பயணி எக்ஸ்-ரே ஸ்கான் செய்து கொண்டிருந்தபோது, அவர் தோளில் மாட்டியிருந்த பையிலிருந்து, விமான நிலைய பாதுகாப்பு பெண் உத்தியோகத்தர் பணம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், சம்பந்தப்பட்ட பெண் உத்தியோகத்தர் பணத்தை விழுங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவில், பெண் உத்தியோகத்தர் பணத்தை விழுங்கிவிட்டு தண்ணீர் அருந்துகிறார்.
இதற்கிடையே பிலிப்பைன்ஸின், போக்குவரத்து பாதுகாப்பு அலுவலகம் கடந்த செவ்வாய்க்கிழமை தனது முகநூல் பக்கத்தில் சம்பவம் குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதில், “விமான நிலையத்தில் பயணியின் 300 டொலர் திருட்டு போன விவகாரத்தில், பாதுகாப்பு உத்தியோகத்தர் சம்பந்தப்பட்டிருப்பது தொடர்பான குற்றச்சாட்டுகள் பற்றிய தகவல் கிடைத்ததும், அதனைச் சரிபார்க்கவும், அதன் உண்மை தன்மையை கண்டறியும் நோக்கில் விசாரணையைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
I guess that’s one way to steal money. 🤔
A screening officer at Ninoy Aquino International Airport in the Philippines is being investigated for allegedly taking $300 from a passenger. CCTV footage captured her concealing something in her waist and trying to swallow folded… pic.twitter.com/YRZvA5Y8oo
— Jacob in Cambodia 🇺🇸 🇰🇭 (@jacobincambodia) September 23, 2023
சம்பந்தப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரின் அடையாளம் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், ஆதாரங்களைச் சேகரிக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது” என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட பெண் உத்தியோகத்தர் உட்பட நான்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.