ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் நேற்று (22) யுவதியொருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சில விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதும், உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்த இலங்கை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்காதது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்த பல்பொருள் அங்காடியில் யுவதி ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கார்கில் ஃபுட்சிட்டி சூப்பர் மார்க்கெட் வலையமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், திருட்டு சம்பவத்தை தொடர்ந்து இந்த மோசமான சம்பவம் இடம்பெற்றதாகவும், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.