பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பேராதனை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் முருங்கன் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தீவித் சாஹித்யன் என்ற பல் மருத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவரே உயிரிழந்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மாணவர்களுடன் தங்கியிருந்த இந்த மாணவன் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மணித்தியாலத்தில் உயிரிழந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1