இலங்கை மீனவர்களின் பைபர் மீன்பிடி படகொன்று தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளது.
நதகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோடியக்கரை கடற்கரையிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில், மணல் வாய்க்கால் என்ற இடத்தின் அருகே, கடற்கரையில் இருந்து சுமார் 75 மீட்டர் கடலுக்கு மூழ்கிய நிலையில் படகு மீட்கப்பட்டது.
கிட்டத்தட்ட முக்கால் பகுதி கடலுக்குள் மூழ்கிய நிலையில் படகு அடையாளம் காணப்பட்டது.
இதையடுத்து, வேதாரண்ம் பொலிசார் உழவு இயந்திரத்தின் மூலமாக கயிற்றிவ் கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.
படகில் OFRP-A-0454-KCH என்று எழுதப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1