வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த ‘கஸ்டடி’ படத்தை அடுத்து நடிகர் நாக சைதன்யா, நடிக்கும் படத்தை சந்து மொன்டேட்டி இயக்குகிறார். இவர், ‘கார்த்திகேயா’, ‘கார்த்திகேயா 2’, ‘பிரேமம்’ தெலுங்கு ரீமேக் உட்பட சில படங்களை இயக்கியவர்.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படம் மீனவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் கதை என்று கூறப்படுகிறது. இதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரகாகுளம் மீனவ கிராமத்துக்குச் சென்ற நாக சைதன்யா அவர்களுடன் உரையாடினார். இந்தப் படத்தில் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தை அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கிறது.
நாக சைதன்யாவுடன் ‘லவ் ஸ்டோரி’ என்ற படத்தில் சாய் பல்லவி ஏற்கெனவே நடித்திருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1