25.1 C
Jaffna
March 6, 2025
Pagetamil
சினிமா

விஜய்யின் ‘லியோ’ இந்தி போஸ்டர் வெளியீடு

விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் இந்தி போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வெவ்வேறு மொழி போஸ்டர்களும் வெளியான நிலையில் தற்போது இந்தி போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மொழி போஸ்டர்களையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. முதலில் வெளியான தெலுங்கு போஸ்டரில், ‘KEEP CALM AND AVOID THE BATTLE’ என எழுதப்பட்டிருந்தது. அதற்கு தக்கவாறு சாத்தமான விஜய்யின் படம் கூலான காஷ்மீர் பேக்ரவுண்டில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக வெளியான கன்னட போஸ்டரில் துப்பாக்கிக்குள் விஜய் இருப்பது போன்ற டிசைனில், ‘KEEP CALM AND PLOT YOUR ESCAPE’ என எழுதப்பட்டிருந்தது.

தமிழ் போஸ்டரில், ‘KEEP CALM AND PREPARE FOR BATTLE’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டரில் விஜய் ஆக்ரோஷத்துடன் கத்தியை கூர்தீட்ட தீப்பொறி பறக்கிறது. இந்நிலையில், தற்போது இந்தி போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் சஞ்சய் தத்தின் கழுத்தை விஜய் நெருக்கும்படியான புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ‘KEEP CALM AND FACE THE DEVIL’ என எழுதப்பட்டுள்ளது. ரசிகர்கள் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Pagetamil

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

‘டிராகன்’ 3 நாள் வசூல் ரூ.50 கோடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

திவ்யபாரதி உடன் டேட்டிங்கா? – ஜி.வி.பிரகாஷ் மறுப்பு

Pagetamil

Leave a Comment