த்ரிஷா விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த த்ரிஷா , தற்போது தமிழில் இரண்டாவது இன்னிங்ஹில் கலக்கி வருகிறார். சமீபத்தில் பொன்னியன் செல்வனில் நடித்து திரையுலக ரசிகர்களை கவர்ந்தார்.
சுமார் 15 வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் ஸ்டார் ஹீரோயினாக வலம் வரும் த்ரிஷா தற்போது தமிழில் மூன்று படங்களிலும், மலையாளத்தில் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்.
சினிமா வாழ்க்கை ஓஹோவென இருந்தாலும். த்ரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் திருமணம் சிக்கலானதாக இருக்கிறது.
கடந்த 2015ம் ஆண்டு வருண் மணியன் என்ற தொழிலதிபருடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் சில நாட்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
இப்போது திரையுலகின் லேட்டஸ்ட் சலசலப்பின் படி, த்ரிஷாவுக்கு 40 வயதில் திருமணம் நடக்கப் போகிறது. பிரபல மலையாள தயாரிப்பாளருடன் த்ரிஷாவுக்கு காதல் இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் பரவியுள்ளது.
இருப்பினும், தயாரிப்பாளர் பெயர் மற்றும் பிற விவரங்கள் இன்னும் தெரியவில்லை. ஆனால், இந்த விஷயத்தை த்ரிஷா அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், விரைவில் அதை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.