யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுர விநியோகம் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி மாவட்ட பொதுச்சந்தை, பாடசாலைகள், பேரூந்துகளில் தியாக தீபத்தின் வரலாற்று நினைவுகளை உள்ளடக்கிய துண்டுபிரசுரம் விநியோகிக்கபட்டது.
தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்றைய தினம் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்படவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1