75000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் நொச்சியாகம மகாவலி அதிகார சபையின் பதில் முகாமையாளர் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவினரால் சந்தேகத்தின் பேரில் அந்த அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான காணியை ஒருவருக்கு மாற்றுவதற்காக இந்த தொகையை இலஞ்சமாக பெற்றுக்கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் பதில் முகாமையாளர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட பதில் முகாமையாளர் இன்று நொச்சியாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1