பல வருடங்களாக ஹிந்தி திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் தென்னக ஹீரோயின்கள் தற்போது பாலிவுட்டில் ஒவ்வொருவராக நுழைந்து வருகின்றனர். பேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸ் மூலம் சமந்தாவும், ஜவான் படத்தின் மூலம் நயன்தாராவும் பாலிவுட்டில் நுழைந்தனர்.
ராஷ்மிகா மந்தனா இந்தியிலும் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மற்றொரு தென்னக நாயகி சாய் பல்லவியும் பாலிவுட்டில் நுழைய க்ரீன் சிக்னல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாய் பல்லவி பாலிவுட்டில் நுழையப் போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
அமீர்கானின் தம்பி ஜுனைத் கான் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காதல் கதையொன்றின் மூலம் இந்தியில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த படத்தில் பாலிவுட்டின் டாப் ஹீரோ அமீர்கானின் தம்பி ஜுனைத் கான் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹீரோயின் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் இந்த படத்திற்கு சாய் பல்லவி நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுனில் பாண்டே இயக்கவுள்ளார்.
ஜுனைத் கான் தற்போது மகாராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். காதல் படமாக உருவாகி வரும் இப்படத்தில் அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார்.