சிங்கள ஊருக்குள்ளால் திலீபன் ஊர்தி சென்றது நல்லிணக்கத்தை பாதிக்குமாம்: கிழக்கு ஆளுனர்!

Date:

நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் பாராளுமன்ற உறுப்பினரால், பொலிஸ் அனுமதி இன்றி, சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தை ஊடுருவி சென்றது. இது இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது.

தற்போது நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அதி கவனத்துடன் செயற்பட கூடிய பொறுப்பு உள்ளது. அப்பொறுப்பில் அவதான குறைவாக செயற்படுவது நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதுடன், சட்ட ஒழுங்கும் பாதிப்படைகின்றது.

எதிர்காலத்தில் நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்த செயற்பாட்டை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

நுவரெலியாவில் 6 பேர் மாயம்

நுவரெலியாவில் பெய்த கனமழை மற்றும் வானிலை தொடர்பான சம்பவங்களால் மாவட்டம் முழுவதும்...

ஹட்டன் மண்சரிவில் 4 பேர் மாயம்

ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்...

ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்

06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்