கொவிட்-19 பரவல் சமயத்தில், தொற்றுநோய் பரவுவது தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞருக்கு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (18) ஐந்து ஆண்டுகளுக்கு xத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
சந்தேக நபருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
மார்ச் 2020 இல், கோவிட்-19 தொடர்பாக ராஜபக்ச குடும்பத்தைக் குறிப்பிடும் தவறான செய்தியை இணையத்தில் வெளியிட்டதாகவும், இதனால் மக்களுக்கும் அரசுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது அவர் குற்றம் சாட்டப்பட்டது.
நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேக நபர், இது தான் உருவாக்கிய கதையல்ல என்றும், 14,239 பேருக்கு இடையில் பகிரப்பட்ட கதை என்றும் கூறினார்.
இதுதொடர்பான உண்மைகளை பரிசீலித்த நீதவான், சந்தேகநபரான இளைஞருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத கடுங்காவல் தண்டனை விதித்தார்.