கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை பிரிவினரால் கடந்த மூன்று மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 1500 மரண விசாரணைகளில் 50 வயதுக்குட்பட்ட 100 பேர் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளதாக கொழும்பு மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர நேற்று (18) தெரிவித்தார்.
50 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுடன் தொடர்புடைய 200 இறப்புகள் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயால் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
குறித்த காலப்பகுதியில் ஏற்பட்ட திடீர் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு மாரடைப்பினால் ஏற்படுவதாகவும், மாரடைப்பினால் இளைஞர்கள் இறக்கும் போக்கு அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் தகவல்களின்படி, இவர்களில் பெரும்பாலானவர்கள் துரித உணவுகளுக்குப் பழகி வருவதாகவும் அவர்களில் சிலர் வேலை மற்றும் கல்விக்காக வீட்டை விட்டு வெளியே இருப்பதாகவும் அவர் கூறினார்.