24.7 C
Jaffna
December 16, 2024
Pagetamil
சினிமா

இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை!

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்பட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி.

இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனிக்கு லாரா என்ற மகள் உள்ளார். லாரா பிளஸ் 2 பயின்று வருகிறார். விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் லாரா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் லாரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காலை லாராவின் அறை கதவு வெகுநேரமாக திறக்காததால் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்று பார்த்த பெற்றோர் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று லாராவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் லாரா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

‘புஷ்பா 2’ வில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவ.24 இல் வெளியீடு

Pagetamil

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பிரிவுக்கும் மோஹினி தேவுக்கும் தொடர்பா?: வழக்கறிஞர் விளக்கம்

Pagetamil

Leave a Comment