அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான உத்திக பிரேமரத்ன அனுராதபுரம் விமான நிலைய வீதியிலுள்ள தனது தந்தையின் வீட்டிற்கு அருகில் சென்று கொண்டிருந்த கார் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், துப்பாக்கிச் சூட்டில் பாராளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது வேறு எவருக்கோ காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
எம்.பி வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது வானில் வந்த சிலர் அவரது காரை நோக்கி பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு ஓடியதாக கூறப்படுகிறது.
அநுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் மற்றும் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உத்திக பிரேமரத்ன கடந்த பொதுத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
அண்மையில் ,விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியில் சுயேச்சையாக நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டார்.
கடந்த சில நாட்களாக அவர் வெளியிட்ட சில கருத்துக்கள் சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.