26 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

திலீபனின் ஊர்திக்கு தடைகோரிய வவுனியா பொலிசாரின் மனு நிராகரிப்பு!

தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி வவுனியாவில் பயணிப்பதற்கு தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அத்துடன், குழப்பங்கள் ஏற்படாத வகையில் பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு இன்று (18) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தியாக தீபம் திலீபனின் 36வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ”திலீபன் வழியில் வருகின்றோம்” என்னும் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனி பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு, திருகோணமலை நகருக்குள் நுழைய முற்பட்ட போது, சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டது.

பின்னர் இன்று அதிகாலை முல்லைத்தீவை வந்தடைந்தது.

இந்த நிலையில், ஊர்திப் பவனி வவுனியாவில் இடம்பெற்றால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதுடன், இன நல்லுறவு சீர்குலையும் என இருவர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அவர்களின் முறைப்பாட்டுக்கு அமைய இந்த ஊர்திப் பவனிக்கு பொலிசார் வவுனியா நீதிமன்றில் தடை உத்தரவு கோரியிருந்தனர்.

அதனை கவனத்தில் எடுத்த மன்று, இறந்தவர்களை நினைவு கூரும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்பதை சுட்டிக் காட்டி, பொலிசாரின் கோரிக்கையை நிராகரித்ததுடன், இன முரண்பாடுகள் மற்றும் குழப்பங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அடுத்த 24 மணித்தியாலத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது!

Pagetamil

‘எமது காணியை மோசடி செய்து விட்டார்கள்’: கிளிநொச்சி நபர் பரபரப்பு புகார்

Pagetamil

கொழும்பு குற்றப்பிரிவு பொலிசாரின் சட்டவிரோத துப்பாக்கிச்சூடு… ரணில் வழங்கிய பணப்பரிசில்: சிஐடி புதிய விசாரணை!

Pagetamil

தமிழ் அரசு கட்சியின் முடிவுகளுக்கு ஏனையவர்கள் ஒத்துவர வேண்டுமென்பது முறையற்றது: செல்வம் எம்.பி

Pagetamil

UPDATE – சல்லி கோவில் ஆக்கிரமிப்பு

east tamil

Leave a Comment