நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்துள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது முழுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான புளொட் தலைவர் த.சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டத்துக்குரியது. மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்கும் இனவாத கலாச்சாரம் கண்டிக்கப்பட வேண்டியது.
அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வு, நல்லிணம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, இப்படியான சம்பவங்கள் நடப்பதன் பின்னணி சந்தேகத்திற்குரியது. அரசாங்கம் கூறும் நல்லிணக்க முயற்சிகள் உண்மையாக மேற்கொள்ளப்படுமாயின், இந்த ஆபத்தான கலாச்சாரத்தை உருவாக்க முயன்றவர்கள் முழுமையான சட்ட நடவடிக்கைக்குள்ளாக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.