தியாகதீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டணம் தெரிவித்தது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஊடக பேச்சாளர் இ.தர்ஷன் கண்டணம் தெரிவித்தார்.
இதன் போது வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சி.ஜெல்சின், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் யோ.நெவில்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1