25.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
இலங்கை

தலைவர் அஸ்ரப் தின 23வது நினைவேந்தல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் 23வது வருட நினைவு தின தேசிய நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை (16) மாலை சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்தியா வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத்தலைவர் கவிமாமணி பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் கலந்து கொண்டு தலைவர் அஷ்ரபின் அரசியல் முன்னெடுப்புகள், இலங்கை அரசியலில் அஸ்ரபின் வகிபாகம், இலங்கை தேசிய அரசியலில் அஷ்ரபின் சாதனைகள், முஸ்லிம் அரசியலில் அஷ்ரப் சாதித்தவை, சர்வதேச தொடர்புகளைப்பேண அஸ்ரப் கையாண்ட முறைகள் தொடர்பில் சிறப்புரை நிகழ்த்தினர்.

மு.கா தவிசாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.மஜிட் (முழக்கம் மஜீத்) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பித்தார். பெருந்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் ஆத்ம ஈடேற்றத்திற்காக விசேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது.

இதே வேளை குறித்த நிகழ்விற்கு செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களை சுதந்திரமாக செய்தி சேகரிப்பதற்கு அடிக்கடி தடை ஏற்பட்டது.இந்த தடையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் சகோதரர் என்று சொல்லி திரிபவர் இச்செயற்பாட்டை முன்னெடுத்திருந்தார்.இவர் அடிக்கடி செய்தியாளர்கள் இருக்கின்ற பகுதிக்கு வந்து செய்தி சேகரிக்க தாம் அழைக்கவில்லை எனவும் தமது நிகழ்ச்சிகளை தடை செய்யும் வகையில் செய்தி சேகரிப்பதை தவிர்க்குமாறும் அநாகரீகமாக கூறினார்.(குறிப்பு-செய்தியாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு உரிய ஏற்பாடு அங்கு இருக்கவில்லை.இதனால் மேடையில் ஏறி தமது ஊடக உபகரணங்களுடன் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.)

அத்துடன் பிரபலமான கவிஞர் மற்றும் அனைவராலும் மதிக்கப்படும் சோலைக்கிளி அதீக் கூட நேரம் போதாமை காரணமாக மாமனிதருடன் மிக நெருக்கத்தைப் பேணிய கடந்த கால வரலாற்றினை இடை நடுவில் தெரிவித்துவிட்டு மேடையை விட்டு இறங்கி சென்றார்.இவர் இவ்வாறு இறங்கி செல்வதற்கு அடுத்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் உரை இடம்பெறவிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்குறித்த இரு செயற்பாடுகளும் வெள்ளிக்கிழமை சிலரால் மேற்கொள்ளப்பட்ட செயலினால் வேறு இடம் மாற்றப்பட்டு மிக துரிதமாக இடம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் மேடை அமைப்பு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நேரமுகாமைத்துவம் பேணப்படாமையினால் ஏற்பட்டதாக அவ்விடத்தில் நின்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டனர்.

இந்நிகழ்வில் உலமாக்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ், எம்.எஸ் தெளபீக், முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம் மன்சூர், செய்யது அலி சாஹீர் மெளலானா, ஹுனைஸ் பாருக், முன்னாள் மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதிப்பொருளாளர் ஏ.சி.யஹியாகான், கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சிப்பிரமுகர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளான கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

-பாறுக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெளிநாடு செல்லும் கனவுக்காக போதைப்பொருள் விற்ற மாணவன் கைது

east tamil

வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் தனியார் பேருந்து சங்கங்கள்!

Pagetamil

இலங்கையில் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை

east tamil

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

அனுர அரசின் மாற்றம் இதுதான்!

Pagetamil

Leave a Comment