இலங்கை அணி வெறும் 50 ஓட்டங்களிற்குள் ஆட்டமிழந்து, ரசிகர்களை கிரிக்கெட்டையே வெறுக்க வைத்துள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் ரசிகர் ஒருவர் சமூக ஊடகங்களில் வறுத்தெடுக்கப்பட்டு வரகிறார்.
இந்தியா இலங்கை இடையிலான ஆசிய கோப்பை இறுதிப்போட்டி நடந்து கொண்டு இருக்கிறது. வெறும் 50 ரன்கள் எடுத்து இலங்கை அணி ஆட்டமிழந்தது.
இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து வந்தது. ஒரு கட்டத்தில் 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதில் சிராஜ் மட்டும் 6 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
முதல் ஓவரிலேயே குஷல் பெரேரா விக்கெட்டை பும்ரா எடுத்தார். அதன்பின் 4வது ஓவரில் 1 பந்தில் ஒரு விக்கெட், 3 மற்றும் 4வது பந்தில் தலா ஒரு விக்கெட், கடைசி பந்தில் ஒரு விக்கெட் என்று சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
அதன்பின் 6வது ஓவரில் மீண்டும் சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தார்.
அதன்பின் அடுத்து மீண்டும் போட்ட ஓவரில் கூடுதலாக ஒரு விக்கெட் எடுத்தார்.
Indian fans to Daniel Alexander right now #INDvSL pic.twitter.com/RTbmFMYNum
— Sameer Allana (@HitmanCricket) September 17, 2023
இன்னொரு பக்கம் தான் வீசிய கடைசி 13 மற்றும் 16வது ஓவரில் தலா 1 மற்றும் 2விக்கெட்களை பாண்டியா எடுத்தார். இதன் மூலம் இலங்கை அணி 50க்கு ஆட்டமிழந்தது.
இந்தியாவிற்கு எதிராக ஒருநாள் போட்டியில் சர்வதேச அணியொன்று எடுத்த மிக குறைந்த ஸ்கோர் ஆகும் இது.
50 ரன்கள் இலங்கை கொழும்பு
58 ரன்கள் – பங்களாதேஸ் – 2014
65 ரன்கள் -சிம்பாபே – 2005
73 ரன்கள் – இலங்கை – 2023
1990 இல் ஷார்ஜாவில் இலங்கைக்கு எதிராக வக்கார் யூனிஸின் 6/26 என்ற சாதனையை சிராஜ் (6/21)இன்று முறியடித்துள்ளார்.
இலங்கை அணி இன்று இந்தியாவிற்கு எதிராக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததும் எக்ஸ் தளத்தில் முக்கியமான பெயர் ஒன்று டிரெண்டானது.
இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் விமர்சகர் டானியல் அலெக்சாண்டர் என்பவரின் பெயர் டிரெண்டானது. இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் மற்றும் விமர்சகரான அவர், இந்தியர்களை கடுமையாக விமர்சிப்பவர்.
அதேபோல் இந்திய கிரிக்கெட் வீரர்களை மிக கடுமையான வார்த்தைகளில் பல முறை விமர்சனம் செய்துள்ளார்.
Indian fans to Daniel Alexander right now #INDvSL pic.twitter.com/RTbmFMYNum
— Sameer Allana (@HitmanCricket) September 17, 2023
இந்திய அணி அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 36 ரன்கள் எடுத்து டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததை மீண்டும் மீண்டும் சொல்லிக்காட்டி கடுமையான விமர்சனங்களை வைத்தவர்தான் டானியல் அலெக்ஸாண்டர்.
இந்த நிலையில்தான் தற்போது இலங்கை அணி 50 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை வைத்து நெட்டிசன்கள் பலரும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.