நீதிமன்றத்துக்குள் நீதிபதியின் முகத்தில் லேசர் ஒளி பாய்ச்சி விளையாடிய ஆசிரியர் கைது!

Date:

கடுவெல நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தின் உள்ளே இருந்து நீதவானின் முகத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சிய டியூஷன் மாஸ்டர் ஒருவரை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடுவெல நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் ஒருவர், நீதவானை நோக்கி லேசர் ஒளிக்கற்றை பாய்ச்சப்பட்டதாக கடுவெல பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.

அதன்படி, நீதவானின் உத்தரவின்படி குற்றப்பிரிவினருடன் வந்த பொறுப்பதிகாரி, அப்போது நீதிமன்றத்தில் இருந்த சுமார் 100 பேரிடம் சோதனை நடத்தினார்.  சோதனை காரணமாக நீதிமன்றப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அப்போது சந்தேக நபரிடம் லேசர் ஒளியை வெளியிடும் கருவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கோட்டே கொடு பம்மா வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...

மட்டு சித்தாண்டி முருகன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்யுமாறு கோரி ஆலயத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் 14 வருடங்கள் ஆகியும் கும்பாபிஷேகம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்