ஓபநாயக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் குழுவொன்றிற்கு கையடக்கத் தொலைபேசியில் ஆபாசமான காணொளிகளை காட்சிப்படுத்திய சம்பவம் தொடர்பில் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓபநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் சுமார் 15 பாடசாலை மாணவிகளிடம் அவ்வப்போது இந்த ஆபாச காட்சிகளை காண்பித்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இது தொடர்பாக பெற்றோருக்கு கிடைத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சந்தேகமடைந்த ஆசிரியரை கைத்தொலைபேசியுடன் கைது செய்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1