கொலம்பியாவின் உள்ளூராட்சி அமைப்புக்களிற்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதில், சிலர் வில்லங்கமான உத்திகளை கையாண்டு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். அப்படியான இரண்டு பிரச்சார சம்பவங்கள் பரவலான கண்டத்தை ஏற்படுத்தியுள்ளன.
பிளாட்டோ மாக்டலேனாவின் மேயர் வேட்பாளர் ரோஜர் சுரேஸ் வெளியிட்ட பிரச்சார வீடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவின் உள்ளாடை அணிந்தபடி, இரண்டு இளம் பெண்கள் விரச நடனம் ஆடுகிறார்கள். அவர்களின் பின்பகுதி மட்டுமே வீடியோவில் காட்டப்படுகிறது. அப்போது வேட்பாளர் ரோஜர் சுரேஸ், இரண்டு பெண்களின் பின்பகுதிகளையும் கைகளால் விலக்கி, தனது முகத்தை வீடியோவில் காண்பித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
“தேர்தலில் வெற்றியடைந்து மேயர் அலுவலகத்துக்கு செல்லும் அனைவரும், ஆட்கள் மாறி, சீரழிந்து போகிறார்கள். நான் அப்படியல்ல. எப்பொழுதும் பழைய ஆள்தான்“ என கூறுகிறார்.
இந்த வீடியோ கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், வேட்பாளர் ரோஜர் சுரேஸ், தன்னை கடவுள் பயமுள்ள மனிதர் என்று கூறிக்கொண்டாலும், சர்ச்சைக்குரிய விளம்பர உத்தியை பதிவு செய்ததற்காக வருத்தப்படவில்லை என்று கூறுகிறார். அதை நீங்கள் காமக் கண்ணால் பார்க்காமல், கலைக்கண்ணால் பார்க்க வேண்டும் என கூறுகிறார். இந்த வீடியோ தன் பிரபலத்தை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
இதைவிட மற்றொரு வீடியோவும் சர்ச்சையாகியுள்ளது.
ஆண்டியோகுவியாவில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளர் கேடலினா ஜரமிலோ காதலனுடன், உல்லாசமாக இருந்த போது எடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.
ஓகஸ்ட் 31 அன்று இரவு முழுவதும் காதலனுடன் அவர் பொழுதை கழித்துள்ளார். அப்போத, வீடியோவை கேடலினா ஜரமிலோவே பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில், அவர் தன் காதலனுக்கு அருகில் படுக்கையில் மேலாடையின்றி படுத்திருப்பதைக் காட்டுகிறது.
“வணக்கம், இன்று உங்கள் கிரீன் பார்ட்டி சட்டமன்ற வேட்பாளர் எண் 74 மிகவும் மகிழ்ச்சியாக எழுந்தார். அன்புடன், அவர் காதலனுடன் பல உச்சக்கட்டங்களையும் அடைந்தார்.
பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்த கூட்டம் ஒரு யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று அவர் ஒரு கண்கவர் முழு நிலவுடன் ஒரு இரவைக் கழித்தார்.
எனவே மறக்க வேண்டாம், சட்டசபைக்கு வாக்களியுங்கள், பசுமைக் கட்சி, சூரியகாந்தி, எண் 74, குட்பை.” என்று ஸ்பானிஷ் மொழியில் ஜரமிலோ கூறினார்.
44 வயதான ஜரமில்லோ, இந்த வீடியோ வெளியானதையடுத்து, பேஸ்புக்கில் நேரலையில் தோன்றி மன்னிப்பு கேட்டார். காதலனுடன் நெருக்கமாக இருந்த போது விளையாட்டாக எடுத்த வீடியோவை தனது பிரச்சார அணியிலிருந்த ஒருவர் தவறுதலாக வெளியிட்டு விட்டார், என்னை மன்னித்து வாக்களியுங்கள் என உருக்கமாக கேட்டுள்ளார்.