அலுவலகத்திற்கு சென்ற ஒருவர், பேருந்திலிருந்து இறங்கும் போது, மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இன்ற காலையில் இந்த சம்பவம் நடந்தது.
நாவற்குழியில் உள்ள பனை தென்னை அபிவிருத்தி சபையில் பணி புரிபவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். அவர் பேருந்தில் வந்து, அலுவலகத்திற்கு முன்பாக இறங்கிய போது, திடீரென மயக்கமடைந்து நிலத்தில் விழுந்தார்.
பின்னர் அவரை பரிசோதித்தபோது உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.
மட்டுவில், சந்திரபுரத்தை சேர்ந்த மாணிக்கவாசகர் சந்திரகுமார் (49) என்பவரே உயிரிழந்தார்.
அவர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1