பிரபல பாதாள உலக உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமாரவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கட்டுநாயக்கவில் கைதுசெய்யப்பட்ட கணேமுல்லை சஞ்சீவ கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1