போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான கணேமுல்லை சஞ்சீவ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு திரும்பிய போதே அவர் கைது செய்யப்பட்டதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் நேபாளம் – காத்மாண்டுவில் இருந்து கட்டுநாயக்கவிற்கு போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கடவுச்சீட்டில் ‘சேனாதிரகே கருணாரத்ன’ என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது.
எனினும், கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினர் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர் கணேமுல்லை சஞ்சீவ என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1