நீண்ட தகராறுகளின் பின்னர் தனது பெற்றோரை சந்தித்துள்ளார் நடிகர் விஜய்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கவுள்ள தனது 68 வது பட வேளைகளில் விஜய் இறங்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியானது.
இதில் ஒன்று இளம் வயது கதாபாத்திரம் என்பதால், விஜய்யை இளமையாக காட்ட முடிவு செய்துள்ள வெங்கட் பிரபு, இதற்கான பணிகளுக்காக விஜயுடன் கடந்த மாதம் அமெரிக்கா சென்றார்.
அதன் பணிகளை ஒரு சில நாட்களில் முடித்துவிட்டு வெங்கட் பிரபு கடந்த வாரமே சென்னை திரும்பினாலும், நடிகர் விஜய் அங்கு தங்கி ஒய்வு எடுத்தார்.
தன் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னை வந்த நடிகர் விஜய், நேற்று தனது பெற்றோரை நேரில் சந்தித்தார்.
அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள தனது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரையும், அம்மாவையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்த விஜய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
விஜய்க்கும், தந்தைக்கும் தகராறு ஏற்பட்டது தெரிந்ததே. இதன் பின் தனது பெற்றோரை சந்திக்காமல் தவிர்த்து வந்தார் விஜய். இது பற்றி சந்திரசேகர் பகிரங்கமாகவே பேசி வந்தார்.
இந்த நிலையில், அவர்கள் மீண்டும் சந்தித்த போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக அறுவை சிகிச்சை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
Bless the family ! Rest in peace haters ! pic.twitter.com/wmCSR7O9pW
— Prashanth Rangaswamy (@itisprashanth) September 13, 2023