27.4 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இந்தியா

நடிகை விஜயலட்சுமி வழக்கு: சீமானுக்கு 2 வது முறையாக சம்மன் கொடுத்த போலீஸ்- வாங்க மறுப்பு

நடிகை விஜயலட்சுமி கொடுத்த திருமண மோசடி, கட்டாய கருக்கலைப்பு புகாரில் நேரில் ஆஜராக வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை வளசரவாக்கம் போலீசார் 2வது சம்மனை நேரில் கொடுத்தனர். ஆனால் சீமான் தரப்பு சம்மனை வாங்க மறுத்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

2008ஆம் ஆண்டு மதுரையில் சீமான் தம்மை திருமணம் செய்து கொண்டார், பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் மதுரை ஹோட்டலில் சாந்தி முகூர்த்தம் நடந்தது. 3 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பின் சீமான் ஏமாற்றிவிட்டார் என்பது நடிகை விஜயலட்சுமியின் புகார்.

இது தொடர்பாக 2011ஆம் ஆண்டு சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை போலீசில் புகார் கொடுத்திருந்தார். அப்போது சீமான் – விஜயலட்சுமி இருதரப்பும் சமாதானமான நிலையில் புகாரை விஜயலட்சுமி திரும்பப் பெற்றார்.

இதன்பின்னர் சீமான் மீது பல்வேறு புகார்களை வீடியோ பதிவுகள் மூலம் கூறி வந்தார் விஜயலட்சுமி.

சென்னையில் தங்கி இருந்த போது தற்கொலைக்கும் விஜயலட்சுமி முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் சென்ற விஜயலட்சுமி, சீமானை பழிவாங்குவதாக வீடியோ பதிவிட்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் மீண்டும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது விஜயலட்சுமி புகார் கொடுத்தார்.

இப்புகாரின் அடிப்படையில் விஜயலட்சுமியிடம் 8 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சீமான் 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்தார் எனவும் விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இதனால் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதனையடுத்து சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை வளசரவாக்கம் போலீசார் முதல் சம்மன் அனுப்பி இருந்தனர்.

அப்போது, கட்சிப் பணிகள் அதிகமாக இருப்பதால் தமக்கு ஆஜராக நேரம் இல்லை என கூறியிருந்தார்.

பின்னர் சீமான் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, அவர் கொடுத்த கடிதங்களை வழங்கினர். அதில், தம் மீதான புகார்கள் குறித்து விளக்கம் கொடுத்தால் ஆஜராக தயாராக என சீமான் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டு 2 வது முறையாக சம்மன் அனுப்ப போலீசார் சென்றனர். அப்போது சீமான் தரப்பில் சம்மனை வாங்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன் என வீடியோ பதில் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

அசைவ உணவை கைவிடும்படி சைக்கோ தனமாக பலவந்தப்படுத்திய காதலன்: 25 வயதான விமானி விபரீத முடிவு!

Pagetamil

Leave a Comment