வெளிநாடு பறந்தார் ரணில்

Date:

நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் 78ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றவுள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச் சபையில் கலந்துகொள்வதற்கு முன்னர், ஜனாதிபதி விக்கிரமசிங்க, G77 + சீனத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக கியூபாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்த உச்சிமாநாடு செப்டம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கியூபாவின் ஹவானாவில் நடைபெறும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...

ஹிரு மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஹிரு மீடியா நெட்வொர்க் மற்றும் ஆசியா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (பிரைவேட் லிமிடெட்)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்