தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்காக தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்படவிருந்த காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை தையிலிட்டி சட்டவிரோத விகாரைக்கு அண்மையாக கூடிய மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனை அடுத்து தெலில்ப்பழை பிரதேச செயலாளரின் அறிவித்தலுக்கு அமைய அளவீட்டுப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், சி.சிறிதரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1