Pagetamil
இலங்கை

‘பிள்ளையானின் செயலாளரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணை தேவை’: சொல்பவர் ஹரீஸ் எம்.பி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக ஒரு பாராதூரமான விடயமாக கருதி சட்ட ஏற்பாடுகளையும் விசாரணை பொறிமுறைகளையும் ஏற்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில்  செய்தியாளர் சந்திப்பு திங்கட்கிழமை(11) இரவு இடம்பெற்றபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு கருத்து தெரிவித்த அவர்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து அரசியல் முதலைகளும் அதனை கட்டுப்படுத்துகின்ற பெரிய ஊடக நிறுவனங்களும் அன்று ஒரு பிழையான கண்ணோட்டத்தில் நாட்டில் சமூக சேவை செய்த அமைப்புகள் இஸ்லாமிய அமைப்புகள் முஸ்லீம் தலைவர்களை கூட கண்டி தலதா மாளிகையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு இராஜனாமா செய்ய வைத்தார்கள். அன்று அரசில் இருந்த 13 க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சுப்பதவியை இராஜனாமாச் செய்திருந்தோம்.

அந்த அளவிற்கு தெற்கில் பாரிய முஸ்லீம் விரோத அரசியல் வீசியது.அக்கால கட்டத்தில் இந்த நாட்டில் முஸ்லீம் மக்களுக்கு மட்டுமல்ல ஏழை வசதி குறைந்த மாணவர்களுக்கு கல்விக்கு நிதியுதவி செய்த அமைப்புகள் பாடசாலைகளின் உட்கட்டமைப்புகளை மேற்கொண்ட பல முஸ்லீம் அமைப்புகள் தடை செய்யப்பட்டன.அந்த அமைப்புகள் மீதான விசாரணைகள் கடந்த 3 வருடங்களாக இடம்பெற்ற நிலையில் சேவை மனப்பாங்கு கொண்ட 5 அமைப்புகள் தொடர்பில் தடை நீக்கத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.

தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் குறித்த 5 அமைப்புகளும் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளன.இதே வேளை தேசிய பாதுகாப்பினை விரும்புகின்ற நாம் குறித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இஸ்லாமிய கோட்பாட்டில் நடாத்தப்பட்ட தாக்குதலாக பார்க்காமல் அரசியல் தேவைக்காக ஒரு ஆட்சி மாற்றத்தை நோக்கிய உத்தியாகவே இந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை நாம் பார்க்கின்றோம்.

தற்போது உள்ள மனித உரிமை ஆணையாளர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உரிய விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என கூறியிருக்கின்றார்.எனவே ஐக்கிய நாடுகள் சபையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக (ICC) இத்தாக்குதலை ஒரு பாராதூரமான விடயமாக கருதி சட்ட ஏற்பாடுகளையும் விசாரணை பொறிமுறைகளையும் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்துகொண்டிருக்கும் போது போலியான கருத்துக்களை வெளியிட்டு பிள்ளையான் போன்றவர்கள் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை நோகடிக்க அனுமதிக்க முடியாது. இவர்களின் இப்படியான போக்குகளை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். ஆஸாத் மௌலானாவின் கருத்துக்களை வைத்து பார்க்கும் போது கடந்த கால சம்பவங்களுடன் அவரது கருத்துக்கள் ஒத்துப்போகிறது. காத்தான்குடி வயோதிபரின் கொலை, பொலிஸாரின் கொலை, குண்டுவெடிப்பு போன்ற விடயங்கள் நடந்து, நீதிமன்றம் சஹ்ரானுக்கு கைதாணை வழங்கியும் அவர் சுதந்திரமாக நடமாட காரணமாக இருந்தவர்கள் தொடர்பில் இப்போது உண்மைகள் வெளிவர ஆரம்பித்துள்ளது. மிகத்திறமையான புலனாய்வு பிரிவை கொண்ட எமது நாட்டின் புலனாய்வு பிரிவு சஹ்ரானை கைது செய்யாமைக்கான காரணம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கார்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த தாக்குகளின் பின்னணியில் பெரிய சக்திகள் இருப்பதாக ஆரம்பம் முதலே கூறிவருகிறார். இந்த தாக்குகளில் முஸ்லிங்களும், கிறிஸ்தவர்களும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஜனாதிபதி எந்த பக்கசார்புமின்றி நடப்பார் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எந்த தகுதி, தராதரமுமின்றி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதிகளை கொண்டு ஜனாதிபதி நியமிக்கவுள்ள விசாரணைக்குழுவுக்கு மேலதிகமாக புலனாய்வு பிரிவின் குழுவொன்றும், சர்வதேச பொலிஸாரின் புலனாய்வு அறிக்கையும், சர்வதேச விசாரணையும்  நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார்.

-பாறுக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

இயக்கத்துக்கு பயந்து உயர் நீதிமன்றம் சென்ற மஹிந்த!

Pagetamil

தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை சாத்தியமா?

Pagetamil

சாரதிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்

east tamil

இந்திய மீனவர் அத்துமீறல்: எதிர்க்கட்சி தமிழ், முஸ்லிம் எம்.பிகளை சந்தித்த மீனவர் பிரதிநிதிகள்!

Pagetamil

Leave a Comment