யாழ்ப்பாணம், கோப்பாயில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அண்மையாக, இராசபாதை சந்திக்கு அருகாக- கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்தும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நெராக மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
எமில் ரவி (44) என்பவரே உயிரிழந்தார்.
விபத்தையடுத்து பேருந்து சாரதியுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் பேருந்தை தாக்கினர். பேருந்துக்கு தீ வைக்கவும் முயன்றனர்.
கோப்பாய் பொலிசார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பேருந்து சாரதி கைது செய்யப்பட்டு, பேருந்து பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.
பொலிசாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள் என 2 பொதுமக்களும் கைதாகினர்.
பேருந்தில் பயணித்த பொதுமக்கள் மற்றொரு பேருந்தில் ஏற்றப்பட்டு, பயணத்தை தொடர்ந்தனர்.