சிறுமியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய குற்றச்சாட்டில் பொலிசார் கைது செய்ய சென்றபோது, தூக்கிட்டு தற்கொலை செய்ய மயன்றவர் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
காரைநகரை சேர்ந்த 47 வயதானவரே உயிரிழந்தார்.
தனது நெருங்கிய உறவினரான சிறமியொருவரை துஸ்பிரயோகம் செய்ததாக முறையிடப்பட்டிருந்தது. கடந்த 3ஆம் திகதி ஊர்காவற்றுறை பொலிசார் அவரை கைது செய்ய சென்றபோது, வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார்.
பொலிசார் அவரை மீட்டு, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (10) உயிரிழந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1