திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் உள்ள இரண்டு மதுபான விற்பனை நிலையங்களில் பணம் செலுத்தாமல் மதுபானம் எடுத்துச் சென்ற வாகரை பொலிஸ் நிலைய சமூகப் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியை மட்டக்களப்பு பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணி இடைநிறுத்தம் செய்துள்ளார்.
இந்த பொலிஸ் பரிசோதகர், மூன்று நாட்கள் விடுமுறை எடுத்திருந்தார். செப்டம்பர் 8ம் திகதி, பணிக்கு வருவதற்காக, சீருடை அணிந்து வீட்டில் இருந்து புறப்பட்டு, திருகோணமலையில் உள்ள ஒரு மதுபானக் கடைக்குச் சென்று, பணம் தராமல், அரை போத்தல் சாராயத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
பின்னர் மட்டக்களப்புக்கு வந்து மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள மதுபான கடைக்கு சென்று பணம் கொடுக்காமல் அரை போத்தல் மதுபானத்தை எடுத்து சென்றுள்ளார்.
மதுபானசாலை உரிமையாளர்கள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியிடம் முறைப்பாடு செய்ததையடுத்து வாகரை பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி விசாரணைகளை அடுத்து பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.