எம்பிலிப்பிட்டிய மொரகெட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைப்பையில் கைவிலங்குகளை மறைத்து வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக அம்பிலிபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
24 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் வீட்டில் போதைப்பொருள் இருப்பதாக எம்பிலிப்பிட்டிய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், இன்று அந்த வீட்டைப் பரிசோதித்த போது கைவிலங்குகள் மீட்கப்பட்டன.
குறித்த பெண் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1