Pagetamil
இலங்கை

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் தகடு மீட்பு!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின் நான்காம் நாளான நேற்று, முதல்முறையாக விடுதலைப் புலிகள் அமைப்பினரின் ஆண் உறுப்பினர்களினது என சந்தேகிக்கப்படும் ஆடைகளும் மீட்கப்பட்டன.

அத்துடன், விடுதலைப் புலிகளின் இலக்கத்தகடு ஒன்றும் மீட்கப்பட்டது.

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் புதனன்று (06) புதனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

4ஆம் நாள் அகழ்வாய்வுகள் நேற்று (09) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.

தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவன், தடயவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை. மதிய உணவருந்துவதற்காக அகழ்வாய்வுகள் இடைநிறுத்தப்பட்டபோது ஊடகவியலாளர்கள் மனிதப் புதைகுழியை புகைப்படம் எடுக்கவும், காணொளி எடுக்கவும் அனுமதியளிக்கப்பட்டது.

நேற்றைய அகழ்வின் போது, த.வி.பு இ.1333 என்ற இலக்கத்தகடு மீட்கப்பட்டது.

இன்று (10) அகழ்வுப் பணிகள் எதுவும் இடம்பெறாதெனவும், நாளை (11) ஐந்தாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு பணிகளை பார்வையிட்ட அமைச்சர்

Pagetamil

யாழில் அரசியல் பிரமுகர்களை சந்தித்த இந்திய தூதர்

Pagetamil

சுண்டிக்குளத்தில் கடற்படையினரால் மர்ம பொருள் மீட்பு

east tamil

கட்டைக்காட்டு பகுதியில் புதிதாக போடப்பட்ட 15 மின் விளக்குகள்

east tamil

பலுகஸ்வெவவில் சிசுவை கொலை செய்த தாய் கைது

east tamil

Leave a Comment