ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் செப்டெம்பர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் எடுத்துக்கொள்ளப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூடவுள்ளதுடன் காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
விசேட வர்த்தமானி இலக்கம் 2334/47 இன் கீழ் வெளியிடப்பட்ட ஆட்கள் பதிவுச் சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகள் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகள் செப்டம்பர் (19) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. அதன்பின், மாலை 5 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தில் கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிவிசேட எண் 2346/02 வர்த்தமானியின் கீழ் வெளியிடப்பட்ட வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 451) கீழ் உள்ள ஒழுங்குமுறைகள் புதன்கிழமை (20) காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானமும் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட உள்ளது.