29.3 C
Jaffna
April 13, 2025
Pagetamil
விளையாட்டு

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டில் கைது!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சித்ர சேனாநாயக்க ஆட்ட நிர்ணய சதி  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று விளையாட்டு அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவில் சரணடைந்ததையடுத்து சேனாநாயக்க கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சச்சித்ர சேனாநாயக்கவிடம் விசாரிப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரியும் கொழும்பு சுகததாச விளையாட்டு வளாகத்தில் உள்ள விளையாட்டு ஒழுக்கக்கேடு தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு வந்துள்ளார்.

அதிகாரி சச்சித்ரவுடன் பேசவும் வாய்ப்பு அளிக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2020 இல் லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டிகளின் போது போட்டிகளின் முடிவை மாற்ற முயற்சித்ததாக சச்சித்திர சேனாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) முதல் தொடரில் போட்டிகளின் முடிவை மாற்றுவதற்காக டுபாயிலிருந்து தொலைபேசி மூலம் சேனநாயக்க இரண்டு கிரிக்கெட் வீரர்களை அணுகியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 2023 இல், ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையைத் தொடங்கிய பின்னர், சச்சித்திர சேனாநாயக்கவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பயணத் தடை விதித்தது.

விளையாட்டு அமைச்சகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியதை அடுத்து, சச்சித்திர சேனாநாயக்கவுக்கு எதிராக மூன்று மாத பயணத் தடை விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், சச்சித்திர சேனாநாயக்க அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார், அவை தன்னையும் அவரது குடும்பத்தினரையும் அவதூறு செய்யும் நோக்கில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் எனக் கூறினார்.

சச்சித்ர சேனாநாயக்க (38) 2012 மற்றும் 2016 க்கு இடையில் இலங்கைக்காக ஒரு டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 24 T20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதையும் படியுங்கள்

தோனி அவுட்டால் பிரபலமான ரசிகை: இன்ஸ்டாகிராமில் 4 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்

Pagetamil

ஓய்வு குறித்து விராட் கோலி சூசகம்!

Pagetamil

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!