ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார்.
இன்று அல்லது நாளை புதிய செயலாளர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதவிநீக்க கடிதம் நேற்று இரவு கிடைத்ததாக தயாசிறி தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக கடமையாற்றிய சரத் ஏக்கநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளார்.