25.3 C
Jaffna
January 25, 2025
Pagetamil
இலங்கை

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், மேற்கு, தெற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, வியாழன் வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக இருக்கும்.

பம்பலப்பிட்டி, மாலிபொட, கெப்பெட்டிபொல, படல்கும்புர மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளில் இன்று நண்பகல் 12.09 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

இயக்கத்துக்கு பயந்து உயர் நீதிமன்றம் சென்ற மஹிந்த!

Pagetamil

தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை சாத்தியமா?

Pagetamil

சாரதிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்

east tamil

இந்திய மீனவர் அத்துமீறல்: எதிர்க்கட்சி தமிழ், முஸ்லிம் எம்.பிகளை சந்தித்த மீனவர் பிரதிநிதிகள்!

Pagetamil

Leave a Comment