26.1 C
Jaffna
December 12, 2024
Pagetamil
மலையகம்

2022 A/L: பார்வையிழந்த மாணவன் கண்டி மாவட்டத்தில் முதலிடம்!

கெலிஓயா ஸ்ரீ பஞ்சரதன மத்திய மகா வித்தியாலயத்தின் பார்வையற்ற மாணவன் திவங்க ரணபாகு பிரேமலால் கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சையின் கலைப் பிரிவில் கண்டி மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

கலைப் பிரிவில் முழு இலங்கையிலும் 75 ஆவது இடத்தைப் பெற்றுள்ள திவங்க, வாய்மொழி முறை மூலம் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன்.

அவர் 2018 ஆம் ஆண்டு தனது 15வது வயதில் முழுமையான பார்வைக் குறைபாட்டிற்கு ஆளானார் மற்றும் அவரது தாயார் நிரோஷனி சுஜீவ குமாரி , இசை டிப்ளோமா பட்டதாரி. அவர் புத்தகங்களைப் படித்து மகனைப் பரீட்சைக்குத் தயார்படுத்தினார்.

திவங்க இதுகுறித்து பேசியபோது, ​​இந்த சாதனை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், கண்டி மாவட்ட வரலாற்றில் பார்வையற்ற மாணவன் ஒருவன் எந்தப் பாடத்திலும் முதலிடத்தைப் பெறுவது இதுவே முதல்முறை என்றும் கூறினார்.

“சாதாரணதர பரீட்சைகளை நெருங்கிக்கொண்டிருந்தபோதுதான் பார்வையை இழந்தேன். கண்பார்வை குறைவதற்கு எந்த காரணமும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பார்வையை மீட்க சிகிச்சை பெற்று வருகிறேன்“  என  திவங்க தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இ.போ.ச காவலாளி கொலை: 3 பேருக்கு விளக்கமறியல்!

Pagetamil

கண்டி தேசிய வைத்தியசாலையில் CT Scanner இயந்திரத்திற்கு கௌரவிப்பு

east pagetamil

காதலிக்க மறுத்த யுவதியை அடித்தே கொன்ற ஒருதலைக் காதலன்!

Pagetamil

சிறுநீர் கழிக்கும் விவகாரத்தில் கடைக்காரரை தாக்கிய சாரதிகள்

Pagetamil

நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் மண்சரிவு!

Pagetamil

Leave a Comment