27 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

யாழ் போதனாவில் சிறுமியின் கை அகற்றப்பட்டதற்கு தாதியின் பொறுப்பற்றதனமே காரணம்: குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 8 வயது சிறுமியின் இடது கை , மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ள சம்பவத்துக்கு, தாதிய உத்தியோகத்தரின் பொறுப்பற்ற நடவடிக்கையே காரணம் என, சிறுமியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் சிறுமியின் தாத்தா சுப்பையா கனக நாயகம் தெரிவிக்கையில்,

கடந்த மாதம் 22 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டிருந்தது சரவணபவன் வைத்தியர் மூலம் மருந்துகளை பெற்றுக் கொண்டோம் மருந்துகளை எடுத்தும் தொடர்ந்தும் காய்ச்சல் இருந்ததால் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் விடுதியில் வைத்திருந்தோம். அங்கு இருக்கின்ற தாதியர்கள் எனது பேத்திக்கு கையில் ஊசி மருந்து செலுத்துவதற்கான ஊசியை ஏற்றி இருந்த போது எந்த தப்பும் நடந்ததாக அப்போது எங்களுக்கு தெரியவில்லை,

பின்னர் மருந்துகளை ஏற்றுக் கொண்ட போது கை வீங்கி இருந்தது. இது தொடர்பில் அங்கிருந்த தாதிக்கு தெரியப்படுத்திய போதும் அவர் அதனை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அந்த இரவு 11 மணி அளவில் மருந்து ஏற்றும் போது மருந்து மற்றும் ரத்தம் வெளியில் வருகிறது என்று சொன்ன அப்போதும் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. அதற்கு அடுத்தடுத்த நாள் வைத்தியரிடம் சொல்லிய போது தான் வைத்தியர் பார்வையிட்ட போது கை முழுமையாக செயலிழந்து விட்டதாகவும், அதற்குரிய மருந்துகளை செய்து அந்த கையை பழைய படி கொண்டு வருவோம் என்று சொல்லிய போதும் கடந்த இரண்டு நாளைக்கு முதல் கை கழற்றப்பட்டு அதற்குரிய மருந்துகள் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

தற்போதும் அவசர சிகிச்சை பிரிவிலேயே எனது பேத்தி உள்ளார். இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை.

இதற்கு முழுமையான காரணம் அந்த விடுதியில் இருந்த தாதியரின் அசண்டையீனமே. நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கவே கூடாது. நாங்கள் தற்போது வருகின்ற வேதனை இன்னும் ஒருவர் படக்கூடாது என்பதனை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடமத்திய மாகாணத்தில் தேர்வு தாள்கள் கசிவு – ஆசிரியர் பணி இடை நீக்கம்

east tamil

மியன்மார் அகதிகள் 12 பேர் விடுதலை

east tamil

தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!

Pagetamil

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்த்தன காலமானார்

Pagetamil

ஜேவிபி ஆட்சியில் அரசியல் செல்வாக்கில் நடந்த கைது: முச்சக்கர வண்டி சாரதிகள் எதிர்ப்பு போராட்டம்!

Pagetamil

Leave a Comment