25.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
சினிமா

மோசடிக்காரருடன் தொடர்பா?: நடிகையுடன் விசாரணை!

பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் சுங்கத்துறை கூடுதல் ஆணையாளர் சச்சின் சாவந்த் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். லக்னோவில் சுங்கத்துறை கூடுதல் ஆணையராக இருந்தபோது சச்சின் சாவந்த் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கும் நடிகை நவ்யா நாயருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. நவ்யா நாயரை பார்ப்பதற்காக பலமுறை இவர் கொச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு நகைகள் உள்பட விலை மதிப்புள்ள பொருட்களை பரிசாக கொடுத்ததும் தெரியவந்தது.

நடிகையை சந்திக்க சாவந்த் 8-10 முறை கொச்சிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நவ்யா நாயரிடம் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் விசாரணை நடத்தினர். மும்பையிலுள்ள நவ்யா நாயரின் வீட்டில் இந்த விசாரணை நடைபெற்றது. சச்சின் சாவந்த் தனக்கு நண்பர்தான் என்றும், ஆனால் அவருடன் வேறு விதமான நெருக்கம் எதுவும் கிடையாது என்றும் நவ்யா நாயர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

சச்சின் சாவந்துடனான நெருக்கம் பற்றிய ஆவணம் கிடைத்தால் நவ்யா நாயர் கைது செய்யப்படலாம் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25இல் ரிலீஸ்

Pagetamil

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

Leave a Comment