14 வயது மாணவிக்கு பியர் அருந்த பழக்கிய தாத்தாவுக்கு பிணை!

Date:

தனது 14 வயது பேத்திக்கு மதுபானம் கொடுத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபரான தாத்தாவை இரு தினங்களில் விடுதலை செய்யுமாறு கெக்கிராவ மாவட்ட நீதவான் செனரத் பண்டார உத்தரவிட்டுள்ளார்.

ரூ.200,000 பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சிறுமியை மதுபோதையில் கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது தனது கட்சிக்காரருக்கு எதிராக பொலிஸார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை வன்மையாக மறுப்பதாக சந்தேகநபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி விஜித விக்ரமநாயக்க தெரிவித்தார். சந்தேக நபர் கெக்கிராவ உனகொல்லேவ பஹலகம பகுதியைச் சேர்ந்த ஈ.ஜி. பியசேன.

14 வயது சிறுமி காலையில் மது அருந்திவிட்டு பாடசாலைக்கு வந்துள்ளார். பாடசாலைக்கு முன்பாக தள்ளாடிக் கொண்டிருந்த போது, போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ்காரர்கள் அவதானித்து, சிறுமி நோய்வாய்ப்பட்டுள்ளார் என நினைத்து உதவச் சென்றுள்ளனர்.

அவர் மது அருந்தியது பின்னர்தான் தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியை கெக்கிராவ பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் சிறுமியிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் சிறுமியின் தாயாரின் இரண்டாவது கணவரின் தந்தையே அவருக்கு மது அருந்தக் கொடுத்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்னர், சிறுமி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

வீட்டுக்கு வந்து மிரட்டிய உபதவிசாளர்: ஊடகவியலாளர் பொலிசில் முறைப்பாடு!

மட்டக்களப்பு வாழைச்சேனையில் தமிழ் ஊடகவியலாளர் கோகுலதாஸன் வீட்டுக்கு சென்ற வாழைச்சேனை  பிரதேச...

உள்ளூர் துப்பாக்கி மீட்பு

மட்டு கரடியனாறு பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மறைத்து வைக்கப்பட்டிருந்த...

மட்டு விடுதியில் இரு குழந்தைகள் பலியான சம்பவம்: தந்தை கைது; பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின!

மட்டக்களப்பில் விடுதியில் தீ பற்றி உயிரிழந்த இரு குழந்தைகளின் தாய்க்கு புற்றுநோய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்