இன்றைய வானிலை

Date:

தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்கு பகுதியில் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாடு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் மேற்கு சரிவுகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வீட்டுக்கு வந்து மிரட்டிய உபதவிசாளர்: ஊடகவியலாளர் பொலிசில் முறைப்பாடு!

மட்டக்களப்பு வாழைச்சேனையில் தமிழ் ஊடகவியலாளர் கோகுலதாஸன் வீட்டுக்கு சென்ற வாழைச்சேனை  பிரதேச...

உள்ளூர் துப்பாக்கி மீட்பு

மட்டு கரடியனாறு பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மறைத்து வைக்கப்பட்டிருந்த...

மட்டு விடுதியில் இரு குழந்தைகள் பலியான சம்பவம்: தந்தை கைது; பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின!

மட்டக்களப்பில் விடுதியில் தீ பற்றி உயிரிழந்த இரு குழந்தைகளின் தாய்க்கு புற்றுநோய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்