உக்ரைனின் மற்றொரு உயர்மட்ட தளபதி போரில் கொல்லப்பட்டுள்ளார்.
உக்ரைனிய தன்னார்வ இராணுவ துணைத் தளபதி செர்ஹி இல்னிட்ஸ்கி, பாக்மூட் பகுதியின் உக்ரைன் கட்டளை தளபதியாகவும் செயற்பட்டு வந்தார்.
அவரது இறுதிச்சடங்கு தலைநகர் கிய்வில் நேற்று (28) நடைபெற்றது.
அவரது மரணம் குறித்த சரியான விவரங்கள் வெளியிடப்படவில்லை. பாக்முட்டிலிருந்து 12 கிலோமீட்டர் தெற்கே உள்ள குர்தியுமிவ்கா நகருக்காக, உக்ரைன்-ரஷ்ய படைகள் மோதலில் ஈடுபட்டுள்ளன. அவர் அங்கு நேரடிப் போரில் அவர் இறந்ததாக இறுதிச் சடங்கில் அறிவிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1