Pagetamil
உலகம்

பிரான்ஸ் அரச பாடசாலைகளில் அபாயா அணிய தடை!

சில முஸ்லீம் பெண்கள் அணியும் தளர்வான, முழு நீள- அபாயா ஆடைகளை அரசு நடத்தும் பாடசாலைகளில் கமாணவிகள் அணிவதை தடை செய்யவுள்ளதாக பிரான்ஸ் கல்வி அமைச்சர் கூறினார்.

இந்த ஆடை பிரான்சின் கல்வியில் கடுமையான மதச்சார்பற்ற சட்டங்களை மீறுவதாக வாதிட்டார்.

பிரான்ஸில் 19 ஆம் நூற்றாண்டு சட்டங்கள் பொதுக் கல்வியிலிருந்து பாரம்பரிய கத்தோலிக்க செல்வாக்கை நீக்கியதில் இருந்து, அரச பாடசாலைகளில் மத அடையாளங்களுக்கு கடுமையான தடையை அமல்படுத்தியுள்ளது. தற்போது, வளர்ந்து வரும் முஸ்லீம் சிறுபான்மையினரைக் கையாள்வதற்கான வழிகாட்டுதல்களைப் புதுப்பிக்க இந்த நடைமுறையை அமுல்ப்படுத்தவுள்ளது.

பிரான்ஸிலுள்ள அரச பாடசாலைகள் பெரிய சிலுவைகள், யூத கிப்பாக்கள் அல்லது இஸ்லாமிய தலைக்கவசங்கள் அணிவதை அனுமதிக்காது.

2004 ஆம் ஆண்டில், பாடசாலைகளில் முக்காடு அணிவதை பிரான்ஸ் தடை செய்தது, மேலும் 2010 ஆம் ஆண்டில், பொது இடங்களில் முகத்தைமுழமையாக  மூடுவதற்குத் தடை விதித்தது.

இந்த அறிவிப்புக்கள் அந்த நாட்டில் வசிக்கும் ஐந்து மில்லியன் முஸ்லிம் சமூகத்தில் பலரைக் கோபப்படுத்தியது.

“பாடசாலைகளில் இனி அபாயா அணிய முடியாது என்று நான் முடிவு செய்துள்ளேன்” என்று கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் தொலைக்காட்சி சனலான TF1 க்கு அளித்த பேட்டியில் கூறினார். “நீங்கள் ஒரு வகுப்பறைக்குள் செல்லும்போது, மாணவர்களைப் பார்த்து அவர்களின் மதத்தை உங்களால் அடையாளம் காண முடியாது.”

செப்டம்பர் 4 முதல் நாடு முழுவதும் பாடசாலைகளுக்கு மாணவர்கள்  திரும்புவதற்கு முன்னதாக பாடசாலை முதல்வர்களுக்கு “தேசிய அளவில் தெளிவான விதிகளை” வழங்குவதாகக் கூறினார்.

நீண்ட காலமாக பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் பள்ளிகளில் அபாயா அணிவது குறித்து பல மாதங்களாக நடந்த விவாதத்திற்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

வரிப் போர்: ஹாலிவுட் படங்களை குறி வைக்கும் சீனா!

Pagetamil

சீனப் பொருட்கள் மீது 125% வரி விதித்த ட்ரம்ப்!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

இரவு விடுதி கூரை இடிந்து விழுந்து 79 பேர் பலி

Pagetamil

மிரட்டிக் கொண்டே பேச முடியாது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!